"ஹாஸ்பிடலில் அழுகிய உடல்கள்.." - புதுச்சேரியில் கிளம்பிய அடுத்த பரபரப்பு
கிரியம்பேட்டா பகுதியை சேர்ந்த குபாலா துர்கா பிரசாத் என்ற மாணவன் ஆற்றில் குளித்தபோது திடீரென நீரில் மூழ்கி பலியானார். ஏனாம் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டநிலையில், பிணவறை குளிரூட்டி பழுதானதால் மாணவனின் உடல் நோயாளி படுக்கையிலேயே பல மணி நேரமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனை வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சில வாரங்களாக குளிரூட்டி பழுதாகி கிடப்பதாகவும், இதனால் சில உடல்கள் அழுகிவிட்டதாக அவர்கள் கூறியதால் பிரீசர் பாக்ஸ் கொண்டு வரப்பட்ட சிறுவனின் உடல் வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story