மம்தாவுக்கு சிக்கல்... ED அதிகாரிகள் மீதான தாக்குதல் விவகாரம்... பறந்த அதிரடி உத்தரவு
மேற்கு வங்கத்தில் ரேஷன் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 5ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் 15 இடங்களில் சோதனை நடத்தினர். மேற்குவங்க அமைச்சர் ஜோதிபிரியோ மாலிக்கின் நெருங்கிய நண்பர் ஷேக் ஷாஜகான் வீட்டில் சோதனை நடத்த சென்ற போது, திரிணாமூல் கட்சி தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையினரையும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அதிகாரிகள் காயமடைந்த நிலையில், சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அமலாக்கத்துறை தலைமையகத்திற்கும் அதிகாரிகள் அறிக்கை அனுப்பிய நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை அளிக்குமாறு மேற்குவங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Next Story