ஆபாச வீடியோ சர்ச்சை- பிரஜ்வால் ரேவண்ணா வீட்டில் அதிரடி சோதனை

x

பிரஜ்வால் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா மீது வீட்டில் பணிபுரிந்த பெண் ஒருவர் புகாரளித்திருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தார். அதன் அடிப்படையில் ரேவண்ணாவின் வீட்டில் பல்வேறு தடயங்களை சேகரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஹாசன் மாவட்டத்தின் ஹொலே நரசிபுராவில் உள்ள ரேவண்ணாவின் வீட்டை தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு தங்களது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து சோதனை மேற்கொண்டுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நீதிமன்ற அனுமதி உடன் பூட்டை உடைத்து உள்ளே சோதனையானது நடத்தப்பட்டது. வீட்டைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு வெளி ஆட்கள் யாரும் உள்ளே நுழையாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்