மனைவியின் நடத்தையில் சந்தேகம் - கணவன் செய்த அதிர்ச்சி செயல்

x

புதுச்சேரி வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வரன் - இந்துமதி தம்பதிக்கு, 2 பிள்ளைகள் உள்ளனர். மனைவியின் நடத்தை மீது சந்தேகம் அடைந்த விக்னேஷ்வரன், அவரிடம் அவ்வபோது தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விக்னேஷ்வரனை அவரது உறவினர்கள் மருத்துவரிடம் அழைத்து சென்று மனநல சிகிச்சை அளித்துள்ளனர். இதனிடையே வழக்கம் போல் பிள்ளைகள் பள்ளி சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த இந்துமதியிடம் விக்னேஷ்வரன் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், கத்தியால் இந்துமதியின் கழுத்தை அறுத்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் மனைவியை கொலை செய்த விக்னேஷ்வரன் காவல்நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்