இனிமேல் சிபிஎஸ்இ பாடத்திட்டம்.. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு

x

புதுச்சேரி மாநிலத்திற்கென்று தனி கல்வி வாரியம் இல்லாததால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் கல்விப்பாடத்திட்டத்தை பின்பற்றி வந்தது. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தமிழக அரசின் தேர்வு வாரியத்தின் கீழ் நடத்தப்பட்டு, தமிழக அசின் மதிப்பெண் சான்றிதழை புதுச்சேரி அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் அங்கீகரித்தது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் இந்தாண்டு 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தியது. தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படித்த 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் தமிழகத்தோடு இணைந்து பொதுத்தேர்வை எழுதி வருகின்றார்கள். வரும் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால், தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்து விலகி மத்திய அரசின் பாடத்திட்டத்தை புதுச்சேரி கல்வித் துறை முழுமையாக பின்பற்ற உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்