நமோ ஆப் மூலம் காங்கிரஸை கடுமையாக விமர்சித்த மோடி

x

ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அம்மாநில பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி, நமோ செயலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது, தேசத்தின் நலன் மற்றும் பாஜக நிர்வாகிகளின் முக்கியத்துவம் என்ன என்பது குறித்து அவர் அறிவுறுத்தினார். மேலும், ஹரியானா மக்களின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி உள்ளிட்டவை தமக்கு உந்து சக்தியாக திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் தங்கள் குடும்பத்தினற்காக மட்டுமே வாழ்வதாக குறிப்பிட்ட மோடி, மற்றவர்கள் குறித்து காங்கிரஸ் கவலை கொண்டதில்லை என விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்