சபரிமலையில் இனி இவர்களுக்கு மட்டுமே அனுமதி - வெளியான அதிரடி அறிவிப்பு
ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே இந்த முறை சபரிமலை செல்ல அனுமதி வழங்கப்படும் என கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவிற்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சிலைகள் உள்ளிட்டவை எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன், கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே, நவம்பர் 16ஆம் தேதி மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கவுள்ள நிலையில், ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Next Story