அடுத்து வரும் 2 நாட்கள்... "உங்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம்.." - எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

x

அடுத்து வரும் 2 நாட்கள்... "உங்களுக்கு அசவுகரியம் ஏற்படலாம்.." - எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல், இலங்கை கடலோரம், அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்திய வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்