50 மருத்துவமனைகளுக்கு இடியாக வந்த சேதி... நாட்டையே பதறவைத்த மெயில்

x

மும்பையில் உள்ள ஜஸ்லோக், ரஹேஜா, கோஹினூர், செவென் ஹில்ஸ், ஜே.ஜே ஹாஸ்பிட்டல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி அலுவலத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. சென்னை, நாக்பூர், பாட்னா, கோவை உள்ளிட்ட 41 விமான நிலையங்களுக்கும் இதே பாணியில், மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விபிஎன் நெட்வொர்க்கை

பயன்படுத்தி இந்த மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாகவும், மின்னஞ்சல்களை அனுப்பியவர்கள் மற்றும் அவர்களின் நோக்கம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்