நெருங்கும் மகாராஷ்டிர தேர்தல்.. ரூ.1,560 கோடியை இறக்கிய பிரதமர் மோடி | PM Modi

x

மும்பையில் நடைபெறும் உலகளாவிய ஃபின்டெக் திருவிழா 2024-ல் பிரதமர் உரையாற்றுகிறார். அப்போது, சுமார் ஆயிரத்து 560 கோடி மதிப்பிலான 218 மீன்வளத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார். தேசிய கப்பல் தகவல் தொடர்பு மற்றும் ஆதரவு அமைப்பின் கீழ், 13 கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் விசைப்படகுகள், மீன்பிடி கப்பல்களில் 1 லட்சம் டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்படும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய ஆழ்கடல் துறைமுகங்களில் ஒன்றான,வாத்வான் துறைமுகத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த துறைமுகம் இந்தியாவின் கடல்சார் போக்குவரத்தை மேம்படுத்துவதோடு, உலகளாவிய வர்த்தக மையமாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்