"மோடியின் 21 ரூபாய்.." - சிக்கலில் பிரியங்கா காந்தி... பறந்த அதிரடி நோட்டீஸ்

x

பிரதமர் மோடி குறித்து பொய் பிரச்சாரம் செய்ததாக பாஜக அளித்த புகாரில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி கோயில் ஒன்றில் தரிசனம் செய்துவிட்டு, 21 ரூபாய் மட்டுமே நன்கொடை அளித்தாக கூறியிருந்தார். இதனையடுத்து பிரதமர் மோடியின் தனிப்பட்ட மத வழிபாட்டு முறை குறித்து, பிரியங்கா காந்தி பொய்ப் பிரசாரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்த புகார் தொடர்பாக வரும் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி, தேர்தல் ஆணையம் பிரியங்கா காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது


Next Story

மேலும் செய்திகள்