சபரிமலைக்கு மெட்ரோ ரயில்? - வெளியானது அதிரடி தகவல்

x

லட்சக் கணக்கான பக்தர்கள் வந்து செல்லும், சபரிமலை ஐயப்பன் கோயிலில், பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சபரிமலைக்கு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. செங்கனூரில் இருந்து பம்பா வரை அமைக்கப்படும் ரயில் பாதையில் மெட்ரோ ரயிலை இயக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு, இந்த திட்டத்தை நிறைவேற்ற 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். முன்னேற்பாடுகளை சரியான நேரத்தில் முடித்தால் அடுத்த 3 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கலாம் என்றும், 2030-ஆம் ஆண்டுக்குள் மெட்ரோ ரயிலை இயக்கலாம் என்றும் இந்திய ரயில்வே கருதுகிறது.


Next Story

மேலும் செய்திகள்