இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு - மருத்துவ சீட்டில் ஸ்ரீ ஹரி என எழுதலாம்...

x

இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு - மருத்துவ சீட்டில் ஸ்ரீ ஹரி என எழுதலாம்...

மருந்து சீட்டுகளில் ஸ்ரீ ஹரி என மருத்துவர்கள் எழுதலாம் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியது சர்ச்சையாகியுள்ளது.

நாட்டிலேயே முதல் முறையாக மத்திய பிரதேசத்தில் இந்தியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது.

இதை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார்.

இது குறித்து பேசிய மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் ஆங்கிலத்திற்கு எதிராக அரசு செயல்படவில்லை என்றும், இந்தி மொழிக்கு முன்னுரிமை அளிப்பதற்காக இந்தியில் மருத்துவ படிப்பு தொடங்குவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், மருந்து சீட்டில் இந்தியில் மருந்துகளை எழுதும் மருத்துவர்கள், மேலே ஸ்ரீ ஹரி என குறிப்பிடலாம் என்று நகைச்சுவையாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்