திருப்பதியில் தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதிஉலா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி கருட சேவை விமர்சையாக நடைபெற்றது. உற்சவர் மலையப்ப சுவாமி, சர்வ திருவாபரண அலங்காரம் பூண்டு கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமிக்கு, தூப தீப நைவேத்திய சமர்ப்பணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நான்கு மாட வீதிகளில் ஏழுமலையானின் கருட வாகன சேவை நடைபெற்றது.
Next Story