#BREAKING || மத்திய பிரதேச தேர்தல் - தொடங்கியது வாக்குப்பதிவு
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்.
இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு .
மத்திய பிரதேசம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு துவங்கியது.
5.6 கோடி வாக்காள ர்கள் இன்று தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர்.
இவர்களில் 2.88 கோடி ஆண் வாக்காளர்களும், 2.72 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். மொத்தம் 22.36 லட்சம் இளைஞர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர் .
மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 2533 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 252 பேர் பெண்கள்.
வாக்கு பதிவிற்காக மாநிலம் முழுவதும் 64726 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 17032 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் முதன்முறையாக 371 வாக்குச்சாவடி மையங்களை முழுக்க முழுக்க இளைஞர்களை கையாளும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவிற்காக 73622 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
700 கம்பெனி மத்திய ஆயுதப் படையினர் மற்றும் மாநில காவல் துறையை சேர்ந்த இரண்டு லட்சம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் புத்னி தொகுதியில், தற்போதைய முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், பா.ஜ.சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் விக்ரம் மஸ்தல் போட்டியிடுகிறார்.
மத்தியப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸுக்கு இடையேதான் முக்கியப் போட்டி நிலவுகிறது.
இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைக்கிறது. இதுவன்றி தேசிய அளவிலான மூத்த தலைவர்கள் 11 பேருக்கு அக்கட்சி வாய்ப்பளித்துள்ளது.
அதேபோல சத்தீஸ்கட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 70 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெருகிறது.
சத்தீஸ்கட் மாநிலத்தில் உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் எஞ்சியுள்ள 70 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
70 தொகுதிகளில் மொத்தம் 958 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
18833 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், துணை முதல்வர் சிங் தேவ் உள்ளிட்டோர் இரண்டாம் கட்ட தேர்தலில் களத்தில் உள்ளனர்.