திருடியதுக்கு ஆயுள் தண்டனை? - "பந்தியில் திருடு போன பலகாரம்" - இது புதுசா இருக்குணே.. புதுசா இருக்கு

x

வாரச்சந்தை அருகே தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது... அதற்காக வைக்கப்பட்டிருந்த பேனரில், மணமகளின் மனதைத் திருடிய குற்றத்திற்காக மணமகனுக்கு ஆயுள் தண்டனையாக திருமணம் நடத்தி வைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது... மேலும், ஆயுள் தண்டனையின் போது துணி துவைப்பது, வீடு கூட்டுவது, சமையல் செய்வது, அடி, மிதி வாங்குவது என அனைத்தும் வழங்கப்படும் என நகைச்சுவையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது... அத்துடன், கல்யாண பந்தியில் கறிகஞ்சி கிடைக்காததால் கைகலப்பு செய்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலை என்றும், பந்தியில் பலகாரம் திருடியதற்காக 3 இளைஞர்கள் கைது என்று சிறுவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததும் நகைப்பை ஏற்படுத்தியது... மேலும், பேனரின் ஓரத்தில் "அடுத்த மாப்பிள்ளை நாங்க... பொண்ணு இருந்தா தாங்க" என்று 2கே கிட்ஸ் தங்கள் சுய விவரத்தைப் பதிவிட்டிருந்தது பலரையும் ரசிக்க வைத்தது...


Next Story

மேலும் செய்திகள்