"ஸ்வீட்டி", "பேபி" என அழைக்கலாமா? - பெண் ஊழியர் போட்ட கேஸ்... கடைசியில் கோர்ட் கொடுத்த டுவிஸ்ட்
பணியிடத்தில் பெண் ஊழியரை ஸ்வீட்டி, பேபி என்று அழைப்பதை எப்போதும் பாலியல் துன்புறுத்தலாக கருத முடியாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய கடலோர காவல் படையில் பயிற்சியாளராக பணியாற்றிய பெண் ஊழியர் தனது உயரதிகாரிக்கு எதிராக தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி சப்யசாச்சி பட்டாச்சார்யா, இந்த தீர்ப்பை அளித்துள்ளார். அந்த பெண் ஊழியர் ஒருமுறை ஆட்சேபம் தெரிவித்த பிறகு, அந்த உயரதிகாரி ஒருபோதும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தவில்லை என்றும், புகாரை விசாரித்த அலுவலக உள்விசாரணைக் குழுவும் தவறு ஏதும் கண்டறியவில்லை என்றும் நீதிபதி கூறினார். போஷ் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, பெண்களுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
Next Story