கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை?

x

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா, மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்திற்கு தாது மணல் நிறுவனம், ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் கொடுத்ததாக கூறப்படுவது குறித்து பினராயி விஜயன் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, எர்ணாகுளத்தை சேர்ந்த கிரீஷ் பாபு என்பவர் தாக்கல் செய்த மனுவை, மூவாற்றுபுழா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து கேரள உயர்நீதிமன்றத்தில் கிரீஷ் பாபு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தாது மணல் நிறுவனத்திடமிருந்து முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன், ஒரு கோடியே 72 லட்சம் ரூபாய் வாங்கியதாக வருமானவரித் துறை தெரிவித்துள்ளதாகவும், இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்