#JUSTIN || ஊரே கொண்டாடும் 9நாள் விழா..அதிரி புதிரியாக சிலைகளின் அணிவகுப்பு..கெத்தாக என்ட்ரி

x

திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள குமரி மாவட்டத்திலிருந்து இரு நாட்களுக்கு முன்பு புறப்பட்ட சாமி விக்கிரகங்கள் தமிழக - கேரளா எல்லையான களியக்காவிளை பகுதியில் இரு மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் மன்னர் உடைவாள் கேரளா அரசிடம் ஒப்படைப்பு. மேற்கு வங்க ஆளுநர் பங்கேற்பு.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் வரும் 15 தேதி நடைபெற உள்ள நவராத்திரி விழாவில் பங்கேற்க குமரி மாவட்டம் சுவாமி விக்கிரகங்களான சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ,குமாரகோயில் முருகன் ,பத்பநாதபுரம் தேவாரகட்டு சரஸ்வதி அம்மன் உள்ளிட்ட சாமி விக்கிரகங்கள் நேற்று முன்தினம் சுசீந்திரம் கோவிலில் இருந்து யானை மற்றும் பல்லக்கில் ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாதபுரம் அரண்மனை வந்தடைந்தது. நேற்றைய தினம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து மன்னரின் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்களுடன் புறப்பட்டு குழித்துறை பகுதியில் வந்தடைந்த ஊர்வலம் இரவு ஓய்வுக்கு பிறகு இன்று காலை குழித்துறை பகுதியில் இருந்து மேள தாளங்கள் முழங்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மன்னரின் உடைவாளும் குமரி தமிழக கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் வந்தடைந்தது.அங்கு இரு மாநில போலீசாரின் அணிவகுப்புடன் பாரம்பரிய முறைப்படி தமிழக அரசிடம் இருந்து கேரளா அரசிடம் உடைவாள் மற்றும் சாமி விக்ரகங்கள் ஒப்படைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த சுவாமி ஊர்வலத்தை வரவேற்க வழி நெடுகிலும் பக்தர்கள் கூடியிருந்து பூஜைகள் வைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.அதுபோல இந்த வரலாற்று நிகழ்வை காண குமரி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்களும் இந்த பகுதியில் குவிந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்