பாட புத்தகங்களில் "இந்தியா"வுக்குப் பதில் "பாரத்" - முதல்வர் பினராயி விஜயன் அதிரடி | Kerala

x

பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என்று குறிப்பிட வேண்டும் என்று என்சிஇஆர்டி குழு அளித்த பரிந்துரையை ஏற்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அரசியலமைப்பு நமது நாட்டை இந்தியா என்றும், பாரதம் என்றும் வர்ணிக்கிறது என்றும், இந்தியா என்ற பெயர் புறக்கணிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் உள்ளதாக தெரிகிறது எனவும் கூறியுள்ளார். வரலாற்றை சிதைக்கும் சங்பரிவாரின் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அரசியலமைப்புக்கு முரணான திட்டங்களுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் போராட முன்வர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்


Next Story

மேலும் செய்திகள்