"ரீல்ஸ்-க்கு லைக் போடலனா அடி விழும்.." - பாடம் எடுக்காமல் படம் எடுத்த ஆசிரியர்கள் - வைரல் வீடியோ

x

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள சில ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை இன்ஸ்டாகிராம் இன்ஸ்டாகிராம் கணக்குகளைப் பின் தொடரவும், ரீல்ஸ்களை லைக் செய்யவும் வற்புறுத்துவதாகப் புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன...

வகுப்பு எடுக்கும்போது ரீல்ஸ் செய்வது... அதை லைக் செய்யச் சொல்வது... செய்யாவிட்டால் அடித்து விடுவதாய் மிரட்டுவது போன்ற செயல்கள் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது...

பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் ஆட்சியரை அணுகி உள்ளனர். இது குறித்து கல்வி அலுவலர் ஒருவரை விசாரணைக்காக அவர் நியமனம் செய்துள்ளார்.

அத்துடன் நிற்காமல் ஆசிரியர் ஒருவர் தனக்கு உணவு சமைத்துக் கொண்டு வரவும், டீ போட்டுத் தரவும் மாணவர்களை வற்புறுத்தியதும் அம்பலமாகியுள்ளது...

இதனால் படிக்க முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்...

விசாரணையில் 3 ஆசிரியர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் பள்ளியில் வீடியோ எடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்