ஹரியானாவில் வெடித்த கலவரம் - மக்கள் தவிப்பு

x

ஹரியானாவில் நுஹ் கலவரம் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அரியானாவில் கடந்த திங்கள்கிழமை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் ஊர்வலம் சென்றபோது, மற்றொரு மதத்தைச் சேர்ந்த சிலர் கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பயங்கர வன்முறை வெடித்த‌து. கலவரம் நூஹ் பகுதியை தாண்டி குர்கான், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய மாவட்டங்களுக்கும் பரவியது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார், மத்திய பாதுகாப்புப்டையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். வதந்தி பரவுவதைத் தடுக்க ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் அவதிப்படும் நிலையில், காய்கறிகளை விற்காமல் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக வணிகர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்