"இனி ஓடவும் முடியாது.. ஒளியவும் முடியாது.."- நாட்டிலேயே இங்கு தான் முதல் முறை - காவல்துறை வைத்த செக்

x

நாட்டிலேயே முதல் முறையாக பாரா மோட்டரிங் மூலம் கண்காணிப்பு பணியில் குஜராத் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் கிர்னர் லில்லி பரிக்ரமா என்ற நிகழ்வு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஜுனாகத் பகுதியில் ஆன்மிக யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, பாரா மோட்டரிங் மூலம் குஜராத் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஆகாய மார்க்கமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் குஜராத் காவல் துறையின் இந்த முன்னெடுப்பு, பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்