பிளேடால் மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்து தந்தை ஆடிய நாடகம் - நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்

x

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 9 வயது மகளை தந்தையே பிளேடால் கழுத்தறுத்து கொடூரமாகக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரசேகர், அவரது மனைவி ஹீமா இருவரும் அதே பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களது 9 வயது மகள் மோக்ஷக்னா, தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன் சந்திரசேகர் பணியிலிருந்து நீக்கப்பட்டதற்கு மனைவியே காரணம் எனக்கருதி, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மோக்ஷக்னா தாயுடன் வசித்த நிலையில், அவரை சந்திரசேகர் பள்ளிக்குச் சென்று பார்த்துவிட்டு பின்னர் காரில், நகரத்திற்கு ஒதுக்குபுறமாக உள்ள ரிங் சாலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மகளை பென்சில் பிளேடால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்றுவிட்டு, விபத்தில் மகள் இறந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைத்துள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், தந்தையே மகளை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்