"பிரதமர் மோடி தான் தீர்வு காண வேண்டும்"- தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், பிரதமர் மோடி தலையிட்டு தீர்வுகாண வேண்டுமென, பஞ்சாப் கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி பொதுச்செயலாளர் சர்வன் சிங் பந்தேர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஹரியானா மாநிலம் அம்பாலாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவப் படையினரை குவிப்பது கவலை அளிப்பதாகவும், போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அமைதியான வழியில் போராட அனுமதிக்க வேண்டும் என்றும் சர்வன் சிங் சந்தேர் கேட்டுக்கொண்டார். குறைந்தபட்ச ஆதார விலை ஒட்டுமொத்த விவசாயிகளின் கோரிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story