வாடிக்கையாளரை தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்
காரைக்காலில், சரமாரியாக தாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, பாதிக்கப்பட்ட நபர் வீடியோ வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Vovt
காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த முருக கணேஷ் என்பவர், தனது மனைவி சுபஸ்ரீ பெயரில், கொரோனாவிற்கு முன்பு தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கியுள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முழுத் தொகையையும் திருப்பி செலுத்திய நிலையில், ஆதற்கான தடையில்லா சான்று வழங்க, தனியார் நிதி நிறுவனத்தை நாடியபோது, அங்கு பணிபுரியும் தமிழரசன், பாண்டியன் உள்ளிட்ட 4 பேர் முருக கணேஷை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவர், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், புகாரின் பேரில் கோட்டுச்சேரி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னை தாக்கிய 4 பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி, முருக கணேஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டு எலி மருந்தை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-