பொங்கி எழுந்து 2 பேர் உயிரை பறித்த `பூமா தேவி' - அதிர்ச்சியில் தலைநகர் மக்கள்
தலைநகர் டெல்லியில், வெள்ளிக்கிழமை இரவு திடீரென பலத்த காற்றுடன் வீசிய புழுதி புயலில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் பல கட்டடங்களும் சேதமான நிலையில், மின்சார சேவை தடைப்பட்டு, டெல்லி வாழ் மக்கள் ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லி மாநகர் பகுதியில் சுமார் 77 கிலோமீட்டர் வேகத்திற்கு புழுதிப்புயல் வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கத்திய இடையூறுகள், வெப்பநிலை உள்ளிட்ட காரணங்களால் வெப்பச்சலன மேகங்கள் உருவாகி அத்தகைய வலுவான காற்றுகளை உண்டாக்கியதாகவும் வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக விமான சேவை பாதிக்கப்பட்டதுடன், இரவு நேரத்தில் வாகனங்களில் சென்ற வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்..
Next Story