அரசையே அசைக்கும் தீர்மானம்.. முக்கிய கட்டத்தில் ராகுல் என்ட்ரி.. தெறிக்க போகும் நாடாளுமன்றம்
கடந்த 2005ஆம் ஆண்டு அமேதியில் முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ராகுல் காந்திக்கு, டெல்லியில் 12 துக்ளக் லேன் பங்களா ஒதுக்கப்பட்டது. கடந்த 19 ஆண்டுகளாகவே ராகுல் அங்கேயே வசித்து வந்தார். இதனிடையே அவதூறு வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அறிவித்த நிலையில், அவர் கடந்த மார்ச் 23ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அந்த அரசு பங்களாவை காலி செய்தார்.
தற்போது உச்ச நீதிமன்றம் அவருக்கு தண்டனையை நிறுத்தி வைத்த நிலையில், ராகுல்காந்தி மீண்டும் எம்பி ஆக தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சி மக்களவை குழு, சபாநாயகரை சந்தித்து ராகுல் காந்தியின் இல்லம் தொடர்பாக பேசியுள்ளனர். இதையடுத்து, அவர் ஏற்கனவே வசித்து வந்த துக்ளக் லேன் இல்லத்தை திரும்ப பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.