இந்தியாவை திரும்பி பார்க்கும் உலக நாடுகள் - பிரதமர் மோடி சொன்ன தகவல்
மும்பையில் இன்றுமுதல் 3 நாட்கள் நடைபெறும் உலகளாவிய கடற்சார் இந்தியா உச்சிமாநாட்டை பிரதமர் மோடி, காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது, குஜராத்தின் தீனதயாள் துறைமுக ஆணையத்தில், துனா தெக்ரா தீப் வரைவு முனையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். இதனைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
கொரோனாவிற்கு பிறகு, ஒட்டுமொத்த உலகமும் புதிய லட்சியங்களுடன் இந்தியாவை நோக்கிப் பார்ப்பதாக தெரிவித்தார். பொருளாதார நெருக்கடியால் சூழப்பட்ட உலகில், இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவடைந்து வருவதாகவும், உலகின் முதல் 3 பொருளாதார சக்திகளில் ஒன்றாக இந்தியா மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் குறிப்பிட்டார். துறைமுக இணைப்பை வலுப்படுத்த, ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர், விரைவில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறும் என்றும் தெரிவித்தார்.