கேரளாவை புரட்டிப்போடும் காய்ச்சல் - நாளுக்கு நாள் அதிகரிக்கும் எண்ணிக்கை
கேரளாவில் கொரோனா பாதிப்புடன் காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதால் மக்கள் பெருமளவு அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கேரளாவில் அரசு மருத்துவமனைகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சை பெறுகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் 5 ஆயிரத்து 412 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். 172 பேர் எலிக் காய்ச்சலுக்கும், 54 பேர் பன்றிக் காய்ச்சலுக்கும் சிகிச்சை பெற்றுள்ளனர். நாளொன்றுக்கு சுமார் 35 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தாலும், காய்ச்சல் எண்ணிக்கை குறையாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Next Story