துரத்தும் முறைகேடு வழக்கு - பினராயி விஜயனுக்கு மே 1ஆம் தேதி...

x

பினராயி விஜயனுக்கு எதிரான எஸ்.என்.சி - வாவ்லின் முறைகேடு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் வரும் மே மாதம் 1ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.கடந்த 1996-ம் ஆண்டு கேரளாவின் மூன்று நீர்மின் நிலையங்களை புனரமைக்க, கனடாவைச் சேர்ந்த எஸ்.என்.சி - லாவ்லின் என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், கேரள மின்வாரியத்துக்கு 374 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் பினராயி விஜயன் உள்பட 7 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பினராயி விஜயன் உட்பட அனைவரையும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும், கேரள உயர்நீதிமன்றமும் விடுவித்தது. பின்னர், மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழக்கானது, வரும் மே மாதம் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில், விசாரணைக்கு வரவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்