லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை அரிவாளால் கொடூரமாக தாக்கிய காதலன் - FAN-ல் தொங்கிய உடல்

x

லிவ்-இன் உறவில் இருந்த பெண்ணை அரிவாளால் கொடூரமாக தாக்கிய காதலன் - FAN-ல் தொங்கிய உடல் - அதிர வைக்கும் வாக்குமூலம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள அடிமாலி பகுதியில் வசித்து வந்தவர் ஸ்ரீதேவி. இவர், ராஜூவ் என்பவருடன் லிவ் இன் உறவில் இருந்து வந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண்ணின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவான ராஜூவ்வை வலை வீசி தேடி வந்தனர். இதனிடையே, ராஜூவை கைது செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டதும், தகராறில் ஸ்ரீதேவி தாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில், குடும்ப வன்முறை மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ராஜூவ் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்