சிறு வயது மகனை வைத்து BJP-க்கு ஓட்டு போட வைத்த பாஜக நிர்வாகி..? இந்தியாவை மிரளவிட்ட வீடியோ

x

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான வினய் மெஹர் என்பவர் போபால் தொகுதிக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், தன்னுடைய சிறு வயது மகனை வைத்து பாஜக வேட்பாளருக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வைத்ததுள்ளார். இதனை தனது அலைபேசியில் வீடியோ எடுத்துள்ள அவர் தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி வேகமாக பரவிவரும் நிலையில், இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரமா அல்லது வீடியோ கேமா என வலைதள வாசிகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்