`Ba(e)d Performance' -ஆசிரியர்களுக்கு ஊதியம் பிடித்தம் -சர்ச்சைப் பின்னணி என்ன?

x

பீகாரில், படுக்கை செயல்திறன் சரியில்லை எனக்கூறி 13 ஆசிரியர்களின் சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநிலக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜமூய் மாவட்டத்தில் இயங்கிவரும் பல்வேறு அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மே.22-ம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வராமல் இருந்ததும், செயல்திறன் சரியில்லாமல் இருந்ததும் தெரிய வந்தது.

ஆசிரியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு, சுற்றறிக்கை அனுப்பட்டது. அதில், மோசமான செயல்பாடுகளுக்காக (Bad performance) ஊதியம் பிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுவதற்குப் பதிலாக, படுக்கை செயல்பாடுகளுக்காக (bed performance) பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. தட்டச்சு செய்யும்போது வார்த்தை தவறுதலாக குறிப்பிடப்பட்டு விட்டதாக வட்டாரக் கல்வி அலுவலகம் விளக்கமளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்