மனைவி மேல் கணவனுக்கு எழுந்த சந்தேகம் - வீடியோ காலால் பிரிந்த உயிர்
பீகாரை சேர்ந்தவர் அமித் குமார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு வந்த இவர், பெங்களூருவை சேர்ந்த செவிலியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பின்பு எந்நேரமும் மனைவி செல்போன் பயன்படுத்தி கொண்டே இருந்ததால் அவரின் நடத்தை மீது அமித்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், தம்பதிக்கிடையே தகராறான நிலையில், அமித்குமாரின் மனைவி கோபித்துக் கொண்டு அவரின் தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மனைவியை வீட்டிற்கு வருமாறு கூறி அவருக்கு வீடியோ கால் மூலம் அழைப்பு விடுத்த அமித்குமார், வர மறுத்த மனைவியிடம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மிரட்டல் விடுத்திருக்கிறார். இந்நிலையில், அழைப்புத் துண்டித்து விட்டு வீட்டிற்கு வி ரைந்த மனைவி, வீட்டிற்குள் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார். பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.