"ஆகஸ்ட் 6" சிஸ்டர்ஸ் டே...சகோதரி தினம் கொண்டாடுவது எப்படி...?
அட டேய்ல இன்னைக்கு நாம எதை பத்தி பாக்கபோறோம்னா.... நம்ம வீட்டுல தொட்டதுக்கெல்லாம் குத்தம் கண்டுபிடிச்சி... டாம் அன்டு ஜெரி மாதிரி... நம்ம கூட எப்பா பாரு சண்டைபோடுறது யாருன்னு கேட்டா.... நம்ம எல்லாரோட மைன்டுக்கும் முதல்ல நியாபகம் வர்ரது அக்கா தங்கச்சி தான்... முக்கியமா சிசிடிவி கேமரா மாதிரி நம்மலை நோட் பண்ணி அம்மாகிட்ட போட்டுக்கொடுக்குறதும் அவங்கதான்... சில நேரத்துல நம்மகூட சேர்ந்து பூஸ்ட் திருடி திங்குறது... காசு திருடுறதுனு இவங்க பன்ன திருட்டு சம்பவங்களை வச்சு வித விதமா மனி ஹைஸ்ட் சீரிஸ் எடுக்கலாம்...
அப்டி பல பெருமைகளக கட்டி ஆளுற நம்ம சகோதரிகள பாராட்டி சீராட்டி... ஒரு டேய் கொண்டாடலைன்னா எப்படி...! அதனால ஆகஸ்டு 6... அதாவது ஞாயிற்று கிழமையான இன்னைக்கு National sisters day ய எப்படி கொண்டாடுறதுனும்... இந்த டேய்ல இருக்க பல சுவாரஸ்யமான விஷயங்களையும் தெரிஞ்சுக்கலாம் வாங்க....
ஹே வெயிட்.. வெயிட்... கன்டென்ட்டுக்குள்ள போறதுக்கு முன்னாடி... இன்ட்ரோ சாங் இல்லனா நம்ம நம்ம உடன் பிறப்புகள்லாம் கோச்சிப்பாங்க... அதுனால எடிட்டர் அண்ணா நம்ம அக்கா தங்கச்சிங்களுக்காக மாஸா வெயிட்டா ஒரு பாட்டு போடுங்க...
சரி... மகத்துவமான இந்த டேய உருவாக்குன... அந்த பாசக்கார பயபுல்ல யாருன்னு தேடிப்பார்த்தப்போ... 1996வது வருஷம் Tennessee நகரத்தை சேர்ந்த Tricia Eleogram தான் இந்த சென்டிமென்டான டேவ உருவாக்கிருக்காராம்... அதாவது நாட்டுல எது எதுக்கோ டே செலப்ரேட் பன்ற நாம... ஏன்? நம்ம கூட ஒன்னு மண்ணா பழகுற சகோதரிகளுக்கு ஒரு டே உருவாக்ககூடாதுனு ஃபீல் பண்ணி டக்குனு ஆகஸ்டு முதல் ஞாயிற்று கிழமைய National sisters dayவாம் அறிவிச்சிட்டாராம்... ச்சா... என்ன மனுஷன்யா...
Hello.. sister... அப்டினு நாம யாரைவேணும்னாலும் ஈசியா கூப்பிடலாம்... ஆனா sisterங்குற வார்த்தையோட முழுமையான அர்த்தம் என்னன்னு கேட்டோம்ன்னா யாருக்கும் தெரியாது... அதாவது Sister அப்டினா நட்பை பரிமாறிக்கொள்பவர்ன்னு அர்தமாம்... அதுனாலதான் ஆஸ்பிட்டல்லையும் சர்ச்லையும்... அன்பா சேவை செய்றவங்கள நாம சிஸ்டர்ன்னு மறியாதையோட கூப்பிடுறோம்...
அம்மா... அண்ணா என்ன அடிச்சுட்டான்... என்னோட ஸ்னாக்ஸை திருடிட்டான்னு... இப்படி நாய விட கேவலமா சண்டை போட்டுக்கிட்டாலும்... அக்கா தங்கச்சி கூட பொறக்குற பசங்க எல்லாருமே லக்கி fellowsதாங்க... ஏன்னா... சின்ன வயசுல இருந்தே சிஸ்டர்ஸோட எமோஷ்னலா கனெட் ஆகுற பசங்க... psychological-ஆ பார்த்தா... தனக்கு வரப்போற மனைவியவோ... தன்னோட இருக்குற காதலியைவோ நல்லா பார்த்துப்பாங்களாம்... இதெல்லாம் கேட்க நல்லாதான் இருக்கு... ஆனா பங்கு போட்டு திங்கலாம்னு வந்தாதான்... நம்ம பசங்க... அக்கா தங்கச்சியைவே தூக்கி போட்டு பந்தாடுவாங்க...
அண்ணன் தங்கச்சி பாசங்குறது இன்னைகு நேத்து வந்த... வெப்சீரிஸ் இல்ல... இதை பத்தி சொல்லனும்னா... பல நூற்றாண்டுகள்... பல இதிகாசங்கள் கடந்து செல்ல வேண்டும்...
அதாவது சினிமாவுல வேணும்ன்னா... அண்ணாத்த ரஜினியும்... வேதாளம் அஜித்தும் தங்களோட தங்கச்சிங்களுக்காக வில்லன்கிட்ட சண்டைபோட்ருக்கலாம்... ஆனா நம்ம கதையில அப்டியே கொஞ்சம் உல்டாவா... வில்லன் தன்னோட தங்கச்சிக்காக ஹீரோவோட சண்டைபோட்டு தன்னோட உயிரையே தியாகம் செய்துருக்காருப்பா... அதுவேற யாருமில்ல... நம்ம ராவணன் தான்... ராமாயணத்துல... ராவணன் சீதைய கடத்துனத்துக்கு முக்கிய காரணமே... சூர்ப்பனகையோட மூக்கை லட்சுமனன் அறுத்தது தான்... ஆனா ராவணனை கடைசிவரை வில்லனாவே பார்த்த நாம... அவரோட வில்லத்தனத்துக்கு பின்னாடி இருக்க தங்கச்சி பாசத்தை பற்றி பெருசா பேசாம விட்டுட்டோம்... தங்கச்சி மேல கை வச்ச... மவன நீ செத்த அப்டிங்குற மெசேஜையும் ராமாயணம் சொல்லுது...
நம்ம வீட்டுல நடக்குற பெரும்பாலன அக்கா தங்கச்சிங்க சண்டைகளை கொஞ்சம் டீகோட் பண்ணி பாத்தா நமக்கே ச்ச்சீ போனு சொல்ல தோணிடும்... டிரெஸ்ஸுக்கு சண்டை... ஸ்னாக்சுக்கு சண்டை.... clipப்புக்கு சண்டை... செருப்புக்கு சண்டைன்னு... இப்டி சில்றத்தனமான விஷயங்களுக்கு... உக்ரெயின் ரஷ்யா போரை விட பயங்கரமா சண்டை போட்டுப்பாங்க...
ஆனா இங்க ரெண்டு சகோதரிங்க... மேல சொன்னமாதிரி சில்ற தனமா சண்டை போட்டுக்காம கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டே பிரேக் பண்ணிருக்காங்கப்பா...
அமெரிக்காவைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் தான் Ann மற்றும் claire... இவங்க ரெண்டு பேரும் பேஸிக்கா volley ball பிலேயர்ஸ்ஸாம்... எல்லார் கிட்டயும் பேசுற மாதிரி இவங்க ரெண்டு பேர் கிட்டயும் முகத்த பாத்துலாம் பேசமுடியாது... ஒரு 4 அடி ஸ்டூல் மேல ஏறி நின்னு தான் பேசனுமாம்... ஏன்னா இவங்க ரெண்டு பேரோட உயரமும் சுமார் 6 அடி இருக்கும்... இந்த நெட்டை சகோதரிகளோட அபார வளர்ச்சிய பார்த்து வியந்து போன கின்னஸ் அமைப்பு.... உலகத்திலேயே உயரமான இரட்டை சகோதரிகள்ன்னு இவங்களுக்கு அவார்டு கொடுத்துருக்காங்க.... அப்போ வீட்டுல ஒட்டடை அடிக்குறது... பல்பு கழட்டுற வேலையலான் ஸ்டூல் இல்லாம இவங்களே கழட்டி மாட்டிடுவாங்கபோல...
இப்போ இருக்குற காலக்கட்டத்துல நாப்பது வயசானாலே... கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலினு , சுகர், பீப்பீன்னு... எழுபது வயசுல வரவேண்டிய நோயெல்லாம் இப்போவே வந்துட்டு இருக்கு ஆனா இங்க ஒரு ரெட்டை சகோரிகள். எந்த ஒரு நோய் நொடி இல்லாம 100 வயசு தாண்டி. சென்சுரி போட்டு கின்னஸ் ரெக்கார்ட் பன்னியிருக்காங்க...
நம்ம தமிழ் சினிமா மற்றும் சீரியல்கள்ல கதை அம்சங்கள் இருக்குதோ இல்லையோ ஆனா கட்டாயம் தங்கச்சி சென்டிமென்ட் எங்கயாச்சும் வச்சுடுவாங்க... அப்டி தங்கச்சி சென்டிமென்ட் வச்சு வெளிவந்த பல படங்கள் மாஸ் ஹிட்டும் குடுத்துருக்கு...
பொதுவா 90 கிட்ஸ்கள் பேட்மேன், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன்னு பெரிய பெரிய சூப்பர் ஹீரோக்களுக்கு தான் ரசிகரா இருந்திருக்காங்க... ஆனா அதே நேரத்துல அந்த சூப்பர் ஹீரோக்களுக்கு போட்டியா கார்ட்டூன் வட்டாரத்துல சக்க போடு போட்டவங்க தான்... The Powerpuff Girls... சரி அதை ஏன்ப்பா இங்க சொல்லுறேன்னு பாக்குறிங்களா... அட இவங்களும் மூனு பேரும் அக்கா தங்கச்சிங்க தான்பா...
சரி ரொம்ப நேரம் SISTERS DAY க்கான சுவாரஸ்யமான விசயங்களை பாத்துட்டு இருந்த நாம இந்த டேய எப்டி செலப்ரேட் பன்றதுன பாக்கலாம் வாங்க....
எப்டியும் சின்ன சின்ன சில்ற சண்டைக்கு ரொம்ப நாள் பேசாம இருப்பீங்க…அதுனால அந்த சண்டையெல்லாம் மறந்துட்டு… சந்தோசமா சிரிச்சு பேசனுமாம்… ஒரு வேலை பாக்க முடியாத தூரத்துல இருந்தாங்கனா.. அட்லீஸ்ட் ஒரு போன் பன்னியாவது விஷ் பன்னுங்கப்பா...
முக்கியமா நீங்க அக்காவுக்கு தம்பியாவோ இல்ல தங்கச்சிக்கு அண்ணனாவோ இருந்தீங்கனா... தன்னோட சிஸ்டர்க்கு என்ன பிடிக்குமோ அதை வாங்கி குடுத்து அவங்கள சந்தோசப்படுத்துங்க... ஏனா அப்போ தான் பிரதர்ஸ் டேய்க் அன்னைக்கு உங்களுக்கு அவங்க செய்முறை பன்னுவாங்க....
எப்டியும் இன்னேரம்... என் கூடவே பொறக்கனும்... என் கூடவே அழுகனும்னு இன்ஸ்டாகிராம் ,பேஸ் புக்னு, எல்லா பக்கமும் பொய்யா சிஸ்டர்ஸ் புகழ் பாட ஆரம்பிச்சுருபீங்க... அதனால சமூக வலை தளத்துல மட்டும் ஃபேக்கான அன்ப காட்டாம... நேரடியா உண்மையான அன்பை போதும் போதும்னு சொல்ற அளவுக்கு வாரி கொடுங்க...
சரிப்பா... நானும் என் தங்கச்சிக்கு சாக்லேட் வாங்கி வச்சிருக்கேன்... சாக்லேட் உருகுறதுகுள்ள போய் குடுத்துடனும்... இல்லனு வைங்க அதுக்கு ஒரு பஞ்சாயத்து வந்துடும்.....
இதோ வந்துட்டேன் தங்கச்சி...