ஆந்திராவில் EVM-ஐ தூக்கி போட்டுஉடைத்த ஆளும்கட்சி MLA.. தலைதெறிக்க ஓடிய அதிகாரிகள்
ஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஆளும்கட்சி எம்எல்ஏ உடைத்தது தொடர்பாக சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மே 13ஆம் தேதி பல்நாடு மாவட்டத்தில் தேர்தல் நடைபெற்ற போது, கலவரம் வெடித்தது. மேலும், தேர்தலுக்குப் பிறகும் வன்முறை தொடர்ந்தது. இந்நிலையில், மெச்சர்லா சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்குள் என்ன நடந்தது என்பது குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில், வாக்குப்பதிவு மையத்திற்குள் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி சென்று, வாக்குப்பதிவு இயந்திரத்தை தூக்கிப்போட்டு உடைப்பது பதிவாகியுள்ளது. அப்போது, தேர்தல் அதிகாரிகள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆந்திர மாநில தலைமை தேர்தல் அதிகாரி முகேஷ் குமார் மீனாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.