“புது மாப்பிள்ளைக்கு பப்பப்பரே“.. 50 வகை சங்கராந்தி விருந்து.. மிரட்டிவிட்ட மாமியார்.. ஆந்திராவில் ருசிகரம்
ஆந்திராவில், புது மாப்பிள்ளைக்கு 250 வகையான உணவுப்பொருட்களை பரிமாறி, மகர சங்கராந்தி விருந்து அளிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் சித்துபூர் கிராமத்தை சேர்ந்த சாய்நாத் என்பவரின் சகோதரி நவ்யா மற்றும் ரேவந்துக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்று, இருவரும் கொச்சியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மகர சங்கராந்தியை முன்னிட்டு மனைவியுடன் வந்த ரேவந்துக்கு, சாய்நாத் விருந்தோம்பல் செய்து அசத்தியுள்ளார். புதுமாப்பிள்ளையான சகோதரியின் கணவருக்கு, 250 வகையான உணவுப் பொருட்களை தயாரித்து, சங்கராந்தி விருந்தாக பரிமாறினார். இதுபோன்ற மெகா விருந்துகள் ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் சங்கராந்தியின்போது நடைபெறுவது வழக்கமாகி வருகிறது.
Next Story