ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிய மனு - டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா வழங்க கோரிய மனு விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு மத்திய அரசிடம் முறையிட வேண்டும் என அறிவுறுத்தல்
x
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் ராகேஷ் தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி [பொறுப்பு] விபின் சங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், கோரிக்கை தொடர்பாக அரசிடம் முறையிட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும், மனுவை திரும்பப் பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.கே. தூபே, மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார். அதற்கு அனுமதி அளித்து, பொதுநல மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்