தெலுங்கானாவில் ரூ.1,800 கோடியில் பிரமாண்ட கோயில்

தெலுங்கானாவில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் யாதகிரி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நடைபெற்றது.
x
தெலுங்கானாவில் பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கும் யாதகிரி நரசிம்ம சுவாமி திருக்கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நடைபெற்றது.

தெலுங்கானா மாநிலம் புவனா யாததிரி மாவட்டத்தில் யாதகிரிகுட்டா கிராமத்தில், லட்சுமி நரசிம்ம சுவாமி குகைக்கோயிலை அம்மாநில அரசு பிரமாண்டமாக புதுப்பித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நிகராக திருக்கோயிலை கட்டமைக்க திட்டமிட்ட அரசு, கோயிலில் சுமார் ஆயிரத்து 800 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளை மேற்கொண்டது.  ஆகம சாஸ்திரங்களின்படி, காக்கத்தியர் கட்டடக்கலையினைப் பின்பற்றியும் 7 கோபுரங்களை கொண்ட கோயில் 14 ஏக்கர் பரப்பளவில் கட்டிமுடிக்கப்பட்டது. மிக அழகாகவும், கம்பீரமாகவும் கட்டப்பட்ட கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் குடங்களை மேளதாளங்கள், வேத மந்திரங்கள் முழங்க எடுத்துவரப்பட்டு, கோயில் ராஜகோபுரம், மூலஸ்தான கோபுரங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. விழாவில் கலந்துக்கொண்ட முதல்வர் சந்திரசேகர ராவ் சிறப்பு பூஜை செய்து, சாமி தரிசனம் செய்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்