டெங்கு பரவலை கட்டுப்படுத்த உயர்மட்ட குழு - 9 மாநிலங்களில் ஆய்வு செய்ய நடவடிக்கை
தமிழகம், கேரளா உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்தும் உயர்மட்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
நாடு முழுவதும் டெங்கு காய்சல் அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
எனினும் தமிழகம், கேரளா, உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களில் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 991 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தற்பொழுது வரை நாட்டின் மொத்த டெங்கு பாதிப்பு 86 சதவீதமாக உள்ளது
இந்நிலையில் டெங்கு காய்ச்சல் தொடர்பான மீளாய்வு கூட்டம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து அதிகம் பாதிப்பு ஏற்பட்டு வரும் 9 மாநிலங்களில டெங்கு காய்சல் பரவலை கட்டுப்படுத்தும் நிபுணர்கள் கொண்ட உயர்மட்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்த குழுவானது, டெங்கு கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநில சுகாதாரதுறைக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதோடு, அவர்களோடு இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள், மருந்துகளின் இருப்பு, மருத்துவ உபகரணங்களின் தேவை குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளது.
Next Story