உத்திரபிரதேச முதலமைச்சர் பதவிக்கு போட்டி - பிரியங்கா காந்தி பெயரை உச்சரித்த காங்கிரஸ்
உத்திரபிரதேசத்தில் முதலமைச்சர் வேட்பாளராக பிரியங்கா காந்தி விரும்பினால் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதேபோன்று வேறு சில வடமாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் எதிர்கட்சியினரை ஒன்று திரட்டும் காங்கிரஸ், பாஜகவுக்கு எதிரான காய்களை நகர்த்தி வருகிறது. இந்த நிலையில் உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ஆனால், முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவதா..? வேண்டாமா..? என்பதை பிரியங்கா காந்தி தான் முடிவெடுக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே சிறந்த தலைவர் இருப்பதால் வேறொரு தலைவர் தேவைப்படும் சூழல் இல்லை எனவும் மறைமுகமாக ராகுல்காந்தியை குறிப்பிட்டு பேசினார். இதனிடையே காங்கிரஸ் கட்சியின் மகிளா மற்றும் இளைஞர் காங்கிரஸ் ராகுல்காந்தி மீண்டும் தலைவராக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி வருகின்றன.
Next Story