கேரளாவை மீண்டும் மிரட்டும் நிபா - 12 வயது சிறுவன் உயிரிழப்பு
கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் 12 வயது சிறுவன் உயிரிழந்தார். நிபா தொற்று பரவியது எப்படி? தடுப்பு நடவடிக்கை எப்படி உள்ளன? விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
கொரோனா பெருந்தொற்றால் இன்னல்களை சந்தித்து வரும் கேரளாவிற்கு புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது நிபா வைரஸ் தாக்குதல்..
கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன், கடந்த 3ஆம் தேதி மூளைக்காய்ச்சல் மற்றும் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் அவரது உடலில் இருந்து மாதிரிகளை சேகரித்து புனேவில் இருக்கும் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதித்ததில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது சனிக்கிழமை இரவு உறுதி செய்யப்பட்டது.சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமாகி, ஞாயிறு அதிகாலை 5 மணிக்கு உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.கேரளாவில் நிஃபா கண்டறியப்படுவது புதிதல்ல...
கோழிக்கோட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் தாக்கிய போது, 17 பேர் உயிரிழந்தனர்.இந்த நிபா வைரஸ் என்பது விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது..குறிப்பாக, பழந்தின்னி வவ்வால்களின் உமிழ்நீர் மூலம் விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் பரவும் என கூறப்பட்டுள்ளது.நிபா வைரஸ் தாக்கினால் உடல்நிலை மிகவும் மோசமடைவதோடு, உயிரிழக்கவும் நேரிடும்.மீண்டும் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன.மத்தியக்குழு ஒன்று கேரளாவிற்கு விரைந்துள்ள சூழலில், வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது
சிறுவனின் குடும்பத்தார், கிராமம், அருகில் உள்ள கிராமங்களில் தீவிர பரிசோதனை செய்ய வேண்டும்.சிறுவனுடன் நெருக்கமாக இருந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.வைரஸ் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இவற்றை பின்பற்றி கேரள சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
Next Story