"ஆப்கனில் இருந்து இதுவரை 565 பேர் மீட்பு" - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
ஆப்கானிஸ்தானில் இருந்து மத்திய அரசு இதுவரை 565 நபர்களை மீட்டுள்ளதாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆப்கன் விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்களை மீட்க ஈ விசா அமல்படுத்தப்பட்டது என்றார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்கள் மத்திய அரசை தொடர்பு கொள்ளும் வகையில் 24 மணி நேரம் செயல்படுவதற்கான அவசர சிறப்பு எண்கள், மெயில் மற்றும் வாட்ஸ்அப் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலானதாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இதுவரை மொத்தமாக, 565 பேர் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Next Story