"விவசாயிகள் போராட்டம், மறியலுக்கு தீர்வு"- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் சாலை மறியலுக்கு தீர்வு காண, மத்திய அரசை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் சாலை மறியலுக்கு தீர்வு காண, மத்திய அரசை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. நொய்டாவிலிருந்து டெல்லிக்கு பயணம் செய்ய 20 நிமிடம் ஆகும் என்றும், ஆனால் விவசாயிகளின் போராட்டத்தால் 2 மணி நேரமாக மாறியுள்ளது என குறிப்பிட்டு, பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில், விவசாயிகளின் மறியலுக்கான தீர்வு மத்திய, மாநில அரசுகளிடம் உள்ளது என தெரிவித்த உச்சநீதிமன்றம், உரிய தீர்வு காண மத்திய அரசுக்கு அவகாசம் அளித்து, விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Next Story