எதிர்க்கட்சிகள் கடும் அமளியால் நாளை காலை வரை மக்களவை ஒத்திவைப்பு
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாளை காலை வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.
கார்கில் போரில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு, மக்களவையில் மரியாதை செலுத்தப்பட்டது. பெகாசஸ் ஒட்டுக்கேட்பு, எம்.பி.க்கள் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்துதல், வேளாண் சட்ட விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனிடையே, மக்களவையில், கார்கில் போரில் வீரமரணமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர், அவை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியதும், மக்களவையில் கடும் அமளிக்கு இடையே உணவு தொழில்நுட்ப சுய தொழில் முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், நாளை காலை வரை மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது
Next Story