தடுப்பூசி திட்டம் வீடில்லாத மக்களுக்கு கிடைக்கவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மறுப்பு

தடுப்பூசி திட்டம் வீடில்லாத மக்களுக்கு கிடைக்கவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மறுப்பு
x
தடுப்பூசி திட்டம் வீடில்லாத மக்களுக்கு கிடைக்கவில்லை - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மறுப்பு

தேசிய சராசரியை விட பழங்குடி மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி திட்டம் அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்தியாவில் போதிய தொழில்நுட்ப வசதி இல்லாததால், வீடில்லாத ஏழை மக்கள் கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் வாய்ப்பை இழந்துள்ளதாக செய்தி வெளியானது. இதனை மறுத்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய செல்போன் வைத்திருப்பதும்,  இருப்பிடச் சான்றிதழ் அளிப்பதும் கட்டாயமல்ல என தெரிவித்துள்ளது. மேலும், கோவின் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை என தெரிவித்துள்ள சுகாதார அமைச்சகம், தொழில்நுட்ப வசதிகள் இல்லாதவர்கள் அரசு தடுப்பூசி மையங்களுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனவும், 80 சதவீதம் தடுப்பூசிகள் இந்த முறையிலேயே செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. குறிப்பாக, தேசிய சராசரியை விட, பழங்குடி மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி திட்டம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்