கேரளா தங்க கடத்தல் விவகாரம் : போலி சான்றிதழை பயன்படுத்திய ஸ்வப்னா - திடுக்கிடும் தகவல்

கேரள தங்க கடத்தலில் சிக்கியுள்ள ஸ்வப்னா, 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாகவும், போலிச் சான்றிதழை பயன்படுத்தி அரசுத் துறையில் வேலைக்கு சேர்ந்ததாக, தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரளா தங்க கடத்தல் விவகாரம் : போலி சான்றிதழை பயன்படுத்திய ஸ்வப்னா - திடுக்கிடும் தகவல்
x
பன்னிரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக கூறப்பட்ட சொப்னா எப்படி அரசின் உயர் பதவிகயில் பணியமர்த்தப்பட்டார் என தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. விசாரணையில் ஸ்வப்னா, போலி சான்றிதழை பயன்படுத்தி வேலைக்கு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப துறையில், பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் என்ற நிறுவனம் மூலம் சொப்னா பணிக்கு சேர்ந்ததிருந்ததை அறிந்த தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள், அது தொடர்பாக விசாரணை நடத்தினர். அப்போது, ஸ்வப்னா அளித்த கல்வி  சான்றிதழ் போலியானது என்பதை கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிகாம் பிடித்திருப்பதாக கல்விச் சான்றிதழ் வழங்கிய பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு விசாரித்த போது ஸ்வப்னா சுரேஷ் தங்களது பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை என தெரிய வந்தது. மேலும், தங்கள் பல்கலைகழகத்தின் அடையாள முத்திரை மற்றும் கையெழுத்தை போலியாக தயாரித்து ஸ்வப்னா, பயன்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  அரசுத்துறையில் சொப்னாவுக்கு பணி அளித்த போது அவரது சான்றிதழ்களின் உண்மை தன்மையை சோதிக்காமல் பணிக்கு சேர்த்திருப்பது மேலும் சர்ச்சையை கூட்டியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்