பி.எம். கேர்ஸ் நிதியை பேரிடர் மேலாண்மை நிதிக்கு பரிமாற்றம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

பி.எம். கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் மேலாண்மை நிதிக்கு பரிமாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பி.எம். கேர்ஸ் நிதியை பேரிடர் மேலாண்மை நிதிக்கு பரிமாற்றம் செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு
x
பி.எம்.கேர்ஸ் திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கில் திரட்டப்பட்ட பணம் எதற்காக செலவு செய்யப்படுகிறது என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்கவில்லை என்றும்,கொரோனா பேரிடரை எதிர்கொள்வது தொடர்பாக தேசிய அளவில் திட்டம் ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் , ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் நிவாரண தொகை வழங்க உத்தரவிடவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்