"கொரோனாவுக்கு செலவிடும் வகையில் நிதியில் மாற்றம் வேண்டும்" - பிரதமருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்

மத்திய அரசின் கடிதத்தால் கொரோனா பாதிப்புக்கு உள்ளானோருக்கு நிதி செலவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரதமருக்கு கேரள முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு செலவிடும் வகையில் நிதியில் மாற்றம் வேண்டும் - பிரதமருக்கு கேரள முதலமைச்சர் கடிதம்
x
மத்திய அரசின் கடிதத்தால்  கொரோனா பாதிப்புக்கு உள்ளானோருக்கு நிதி செலவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பிரதமருக்கு கேரள முதலமைச்சர் 
தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் பேரிடரின் போது நிதியை செலவிடுவது தொடர்பாக ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்த  விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளதால் கேரளாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானோருக்கும் மரணமடைந்தவருக்கும் உதவ இயலாத நிலைக்கு கேரள அரசு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அந்த நிதியை கொரோனாவுக்கு செலவிடும் வகையில் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் பிரதமருக்கு கேரள முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்